Sep 7, 2026
Thisaigal NewsYouTube
புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுகிறது ஜேபிஎன்.— செப்டம்பர் 7 வரை அச்சிடும் சேவை பாதிப்பு
தற்போதைய செய்திகள்

புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுகிறது ஜேபிஎன்.— செப்டம்பர் 7 வரை அச்சிடும் சேவை பாதிப்பு

Share:

தேசியப் பதிவுத் துறையான ஜேபிஎன், தற்போதைய மைகாட் அட்டையிலிருந்து புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுவதால், மைகாட் அச்சிடும் சேவையில் இன்று முதல் தற்காலிக இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த இடையூறு செப்டம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை நீடிக்கும் என்று ஜேபிஎன் தெரிவித்துள்ளது.

அவசரத் தேவையில்லாதவர்கள், இந்த காலகட்டத்தில் மைகாட்டை புதுப்பிப்பது அல்லது மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, முதல் முறையாக மைகாட்டுக்கு விண்ணப்பிக்கவுள்ள பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், விண்ணப்பத்தை சற்று தாமதப்படுத்துமாறு ஜேபிஎன் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக 12 வயதை எட்டும் குழந்தைகள், புதிய தலைமுறை மைகாட் அறிமுகமான பின்னர் அதனைப் பெறும் வகையில், தற்போது விண்ணப்பிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாற்றக் காலத்தில் பொதுமக்கள் பொறுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டும் என்று ஜேபிஎன். கேட்டுக்கொண்டதுடன், ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பும் தெரிவித்துள்ளது.

புதிய தலைமுறை மைகாட் தொடர்பான அடுத்தகட்ட தகவல்களுக்கு ஜேபிஎன். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து