Sep 1, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த 6 மாதங்களில் 2 லட்சம் வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்தத் திட்டம்
தற்போதைய செய்திகள்

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சம் வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்தத் திட்டம்

Share:

அடுத்த ஆறு மாதங்களில் வங்காள தேசத்தில் இருந்து சுமார் 2 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக வங்காள தேச அரசாங்கம் அறிவித்துள்ளது.

பல்வேறு ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலம் கட்டம் கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்காளதேச உள்ளாட்சி அரசாங்கம், கிராமப்புற மேம்பாடு மற்றும் கூட்டுறவு இளைய அமைச்சர் மீர் ஷாஹே ஆலம் வெளியிட்டுள்ள தகவலில், இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது செப்டம்பர் மாத இறுதி முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தற்போது சுமார் 8 லட்சம் பதிவு செய்யப்பட்ட வங்காளதேசத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், பதிவு செய்யப்படாதவர்களையும் பதிவு செய்ய மலேசிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் கடன் அடிமைத்தனம் மற்றும் கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வங்காள தேசத்தில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்துவதை மலேசியா கட்டுப்படுத்தி வந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் மலேசியாவிற்கு வருகை புரிந்த வங்காள தேச பிரதமர் தாரிக் ரஹ்மான், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் -ஐ சந்தித்து, வங்காள தேச தொழிலாளர்களுக்காக மலேசியாவின் தொழிலாளர் சந்தையை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

எல்.பி.டி - யில் 11 வாகனங்கள் பயங்கர விபத்து — 4 பேர் பலி

எல்.பி.டி - யில் 11 வாகனங்கள் பயங்கர விபத்து — 4 பேர் பலி

புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுகிறது ஜேபிஎன்.— செப்டம்பர் 7 வரை அச்சிடும் சேவை பாதிப்பு

புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுகிறது ஜேபிஎன்.— செப்டம்பர் 7 வரை அச்சிடும் சேவை பாதிப்பு

பூடி மடானி எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் 300 லிட்டராக உயர்வு!

பூடி மடானி எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் 300 லிட்டராக உயர்வு!

மைகாட் அச்சிடும் சேவைகள் செப்டம்பர் 7 வரையில் தற்காலிக நிறுத்தம் / மேம்படுத்தப்பட்ட புதிய அட்டைக்குக் காத்திருக்குமாறு ஜேபிஎன் அறிவுறுத்து

மைகாட் அச்சிடும் சேவைகள் செப்டம்பர் 7 வரையில் தற்காலிக நிறுத்தம் / மேம்படுத்தப்பட்ட புதிய அட்டைக்குக் காத்திருக்குமாறு ஜேபிஎன் அறிவுறுத்து

செதாபாக்கில் 22-ஆவது மாடியில் இருந்து விழுந்த 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழப்பு

செதாபாக்கில் 22-ஆவது மாடியில் இருந்து விழுந்த 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழப்பு

கேபிள் திருடர்களின் கார் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு - 30 நிமிடங்கள் துரத்திச் சென்று பிடித்த போலீசார்

கேபிள் திருடர்களின் கார் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு - 30 நிமிடங்கள் துரத்திச் சென்று பிடித்த போலீசார்