நாட்டில் மேம்படுத்தப்பட்ட புதிய மைகாட் அட்டையை அறிமுகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், நடைமுறையில் உள்ள மைகாட் அச்சிடும் சேவைகளை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேசியப் பதிவிலாகாவான ஜே.பி.என் அறிவித்துள்ளது.
அவசரத் தேவை இல்லாதவர்கள் இந்தக் காலகட்டத்தில் மைகாட்-ஐ மாற்றுவதையோ அல்லது புதுப்பிப்பதையோ தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு ஜே.பி.என் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், 12 வயதை எட்டிய சிறார்களுக்கான முதல் மைகாட்-க்கு விண்ணப்பிக்க உள்ள பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மைகாட் கிடைக்கும் வகையில் சிறிது காலம் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சேவைத் தடங்கல் முதலில் ஆகஸ்ட் 26 முதல் 31-ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மேம்படுத்தப்பட்ட மைகாட் அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மாற்றப் பணிகள் காரணமாக தற்போது தடங்கல் காலம் செப்டம்பர் 7 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மைகாட் சேவையில் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ள ஜே.பி.என், பொதுமக்களின் பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளது.








