பினாங்கு டத்தோ கிராமட் கான்வென்ட் சீனப்பள்ளி, டத்தோ கிராமட் கான்வென்ட் இடைநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் சிற்றுண்டிச் சாலையில் விற்கப்பட்ட நாசி லெமாக்கை சாப்பிட்டதால் மொத்தம் 49 மாணவர்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அவர்கள் சாப்பிட்ட உணவில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என நம்பப்படுகிறதாகவும் அது குறித்தத் தகவல் தீமூர் லாவுட் மாவட்ட சுகாதார அலுவலகம் வாயிலாக தெரிவிக்கப்பட்டதாக சுகாதாரம், இளைஞர், விளையாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கோய் சி சென் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இரு பள்ளிகளின் மாணவர்களும் ஒரே சிற்றுண்டிச் சாலையைத்தான் பயன்படுத்து தெரிய வந்துள்ளதாகவும் Daniel குறிப்பிட்டார்.
அந்தச் சிற்றுண்டிச் சாலையைப் பயன்படுத்தும் 903 மாணவர்களில் 49 பேருக்கு சுகாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் தொடக்கப்பள்ளியைச் சார்ந்த 21 பேர் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் 28 பேர் ஆவர்.
மாணவர்களின் சுகாதாரப் புரச்சனைக்குக் காரணம் அவர்கள் சாப்பிட்ட நாசி லெமாக் என நம்பப்படும் நிலையில் இன்னும் விசாரணை நடந்து வருவதாகவும் டேனியல் குறிப்பிட்டார்.
உணவுப் பாதுகாப்பு, கை சுத்தம் ஆகியவை குறித்த சுகாதாரக் கல்வி சம்பந்தப்பட்ட உணவு தயாரிப்பாளர்கள் உட்பட அனைத்து சிற்றுண்டிச் சாலைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி சிற்றுண்டிச் சாலையிலும் அதன் சமையலறையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி உணவக ஆய்வு மதிப்பெண் திருப்திகரமாக இருந்தது.
இருப்பினும், சில தர மேம்பாட்டு நடாடிக்கைகளை சிற்றுண்டிச் சாலை நடத்துநர் மேற்கொள்ள வேண்டும் எனவும் டேனியல் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
சுகாதாரத்தின் அடிப்படையில் சில முன்னேற்றங்கள் உள்ளன, அவை பள்ளி கேன்டீன் மற்றும் சம்பந்தப்பட்ட உணவு வழங்குநர்களால் செய்யப்பட வேண்டும்.








