மூவார், செப்டம்பர்.04-
மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி எதிர்த்திசையில் இரண்டு கார்களை மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் மூவார், ஜாலான் ஸ்துலாங் காஜா லெங்கா, பத்து 30 என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இதில் உள்ளூரைச் சேர்ந்த 31 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி, கடும் காயங்களுக்கு ஆளாகி, மூவார், சுல்தானா ஃபாதிமா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.








