நேற்று பினாங்கு பாயான் லெபாஸ்ஸில் உள்ள தனது மின் உற்பத்தி அறையில் 12 வயது சிறுவனை மின்சாரம் தாக்கியதற்கான காரணத்தை அடையாளம் காண விசாரணையை நடத்தி வருகிறது தெனாகா நேஷ்னல் பிஎச்டி.
அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள டி என் பி நிறுவனம், மின் உற்பத்தி அறை ஆபத்தானது என்றும் தடைசெய்யப்பட்ட பகுதி என்பதால் அத்துமீறி நுழைய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அந்நிறுவனம் நினைவூட்டியது.
இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து ஆழமான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இங்குள்ள தாமான் ஶ்ரீ பாயூ, ஜாலான் கம்போங் புக்கிட்டில் அமைந்துள்ள டி என் பி யின் மின் உற்பத்தி அறையில் விழுந்த பந்தை எடுக்க நுழைந்த 12 வயது சிறுவனை மின்சாரம் தாக்கியது என ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
மின்சாரத் தாக்கத்தில் அச்சிறுவனின் உடல் 80 விழுக்காடு கருகியது








