Dec 2, 2025
Thisaigal NewsYouTube
21 கோடியே 42 லட்சம் வெள்ளி ஒப்பந்தம்
தற்போதைய செய்திகள்

21 கோடியே 42 லட்சம் வெள்ளி ஒப்பந்தம்

Share:

துன் மகாதீருக்கு எதிராக குற்றச்சாட்டு

தமக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கிற்கு எதிராக தமது வாதத்தை முன்வைக்கும் வகையில், முன்னாள் பிரதமரும் நிதியமைச்சருமான துன் டாக்டர் மகாதீர் முகமது தொடர்புடைய நிறுவனத்திற்கு 21 கோடியே 42 லட்சம் வெள்ளி ஒளியியல் இழை ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்றிரவு ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் ஈ-பைலிங் மூலம் தாக்கல் செய்யப்பட்ட பாதுகாப்பு அறிக்கையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இதனை நிரூபிக்கத் தாம் தயாராகவும் இருப்பதாக தெரிவித்தார்.

மகாதீரின் மூத்த மகன் மிர்ஸான், 1994 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஒப்கோம் கேபல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்ததாகவும், அவரது இரண்டாவது மகன் முக்சானி 2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இயக்குனராகவும், மூன்றாவது மகன் முக்ரீஸ் 1994 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இயக்குனராகவும், முக்ரீஸ் ஸின் மனைவி நூர்ஸியாத்தா ஸகாரியா 1995 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இயக்குநராக இருந்ததாகவும், ஒப்பந்தம் வழங்கப்பட்டபோது மகாதீர் பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்ததாகவும் பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார்.

Related News