Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன்பண உதவி
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன்பண உதவி

Share:

ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன்பண உதவியான BIKECARE-1000 (பைக்கேர்-1000) திட்டத்திற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பம் எதிர்வரும் ஜூன் 30ஆம் தேதி வரை திறந்திருக்கும்.

சிலாங்கூர் குடிமக்களுக்கான சிறப்பு திட்டத்திற்கான படிவத்தை மாநில அரசு நிர்வாக கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள சிலாங்கூர் ஊழியர் திறன் மேம்பாட்டு பிரிவான UPPS அலுவலகத்தில் பெறலாம்.

விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும். . அவை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாகவும் செல்லுபடியாகும் மோட்டார் சைக்கிள் உரிமம் கொண்டவராகவும், மற்றும் கடன் குறிப்பு தகவல் அமைப்பு மையமான CCRIS- தடுப்பு பட்டியலில் சேர்க்கப்படாதவராகவும் இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பராய்டு கூறினார்.

அனைத்து விண்ணப்பங்களும் விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல், உத்தரவாததாரரின் அடையாள அட்டையின் நகல், வங்கி அறிக்கையின் நகல், மோட்டார் சைக்கிள் உரிமத்தின் நகல் மற்றும் சமீபத்திய சம்பளச் சீட்டு நகல் ஆகியவற்றுடன் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வரும் ஜூன் 30 ஆம் தேதிக்கு முன் மாநில அரசு நிர்வாக கட்டிடத்தில் உள்ள யுபிபிஎஸ் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாப்பாராயுடு கேட்டுக்கொண்டர்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது