கெடா மாநிலத்தில் 180 டன் எடை கொண்ட உள்நாட்டு அரிசியை பதுக்கி வைத்திருந்த ஒரு தொழிற்சாலையில் இருந்து சிறப்பு பணிக்குழுவினர் ஒட்டுமொத்த அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
அரிசி கையிருப்பு வைத்திருப்பதற்கான லைசென்ஸ்ஸை கொண்டிருக்காத அந்த தொழிற்சாலையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட போது அந்த ராட்ஷக கிடங்கில் அரிசி பதுக்கி வைத்திப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக விவசாயம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சரான சான் ஃபோங் ஹின் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் மொத்த மதிப்பு 4 லட்சத்து 5 ஆயிரம் வெள்ளியாகும் என்று சான் குறிப்பிட்டார்.








