கோலாலம்பூர், நவம்பர்.15-
இன்று பிற்பகல் 1.33 மணியளவில் இந்தோனேசியா, Talaud தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
மெட்மலேசியாவின் அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் Talaud தீவிலிருந்து சுமார் 33 கிலோமீட்டர் கிழக்கே அது மையம் கொண்டிருந்தது என்றும், அது 10 கிலோமீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது என்றும் அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று மெட்மலேசியா தெரிவித்துள்ளது.








