Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஓன்லைன் குற்றச்செயல்களை முறியடிப்பதில் மேத்தா தோல்வி
தற்போதைய செய்திகள்

ஓன்லைன் குற்றச்செயல்களை முறியடிப்பதில் மேத்தா தோல்வி

Share:

கோலாலம்பூர், செப்டம்ல்ர்.22-

இணையம் வாயிலாக நடைபெறும் ஓன்லைன் குற்றச்செயல்களைத் துடைத்தொழிப்பதில் சமூக ஊடகங்களை குறிப்பாக பேஸ்புக்கை நிர்வகித்து வரும் மேத்தா தோல்விக் கண்டு இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் வர்ணித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி வரை பேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட உள்ளடக்கங்களில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 774 உள்ளடக்கப் பதிவேற்றங்களை அகற்றும்படி மேத்தாவிற்கு விண்ணப்பிக்கப்பட்டதாக அமைச்சர் டத்தோ ஃபாமி விளக்கினார்.

அனைத்து சமூக ஊடகங்களிலும், உள்ளடக்கங்களை அகற்றும்படி செய்து கொண்ட மொத்த விண்ணப்பங்களில் மேற்கண்ட எண்ணிக்கை 59 விழுக்காட்டை பிரதிநிதிக்கிறது.

இந்த எண்ணிக்கையில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 127 விண்ணப்பங்கள், இணைய வாயிலாக நடத்தப்படும் சூதாட்டங்களாகும். இதில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 665 உள்ளடக்கங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன.

ஸ்கேம் மோசடிகள் சம்பந்தப்பட்ட 37 ஆயிரத்து 722 விண்ணப்பங்களில் 36 ஆயிரத்து 918 விண்ணப்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய உள்ளடக்கப் பதிவேற்றங்கள் அனைத்தும் இன்னமும் பேஸ்புக்கில் உள்ளன. அவை தொடர்ந்து பேஸ்புக்கில் இருக்குமானால் ஆபத்தைத் தர வல்லதாகும் என்று டத்தோ ஃபாமி தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Related News