Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி உறுதி மொழி சடங்கு
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி உறுதி மொழி சடங்கு

Share:

சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியேற்பு சடங்கு, வரும் சனிக்கிழமை காலையில் நடைபெறவிருக்கிறது. மந்திரி பெசார் பதவியேற்பு சடங்கிற்கு பின்னர் அன்றைய பிற்பகலில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்கள் மற்றும் பதவியேற்பு சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பதவியேற்பு சடங்கு திங்கட்கிழமை மாற்றப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் மருத்துவ சிகிச்சைப்பெற்றப் பின்னர் நேற்று காலையில் நாடு திரும்பிய மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா விற்கு சற்று ஓய்வு தேவைப்படுவதாக அரண்மனை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News