Dec 2, 2025
Thisaigal NewsYouTube
5 பள்ளிகளுக்கு 6 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

5 பள்ளிகளுக்கு 6 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

Share:

பள்ளியின் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுக்காக சிலாங்கூர், கின்ராரா தொகுதியில் உள்ள 5 பள்ளிகளுக்கு 6 லட்சம் வெள்ளியைக் கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த மானியத்தின் மூலம் பள்ளி மைதானம், கழிவறைகள், கூரைகள், வேலிகள், சிற்றுண்டிச்சாலை மற்றும் நடைபாதைகள் போன்ற அடிப்படை வசதிகள் சீரமைக்கப் படுவதாகத் துணை கல்வி அமைச்சர் லிம் ஹூய் இங் தெரிவித்தார்.

கின்ராரா வில் உள்ள செக்‌ஷன் 4 இடைநிலைப்பள்ளிக்கு 2 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்ட வேளையில், கின்ராரா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பண்டார் பூசோங் ஜெயா இடைநிலைப்பள்ளி, பூச்சோங் தேசிய வகை தமிழ்ப்பள்ளி, மற்றும் கெங் சீ சீனப் பள்ளி ஆகிய 4 பள்ளிகளுக்கு ஒரு லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக லிம் ஹூய் இங் குறிப்பிட்டார்.

Related News