Jul 16, 2026
Thisaigal NewsYouTube
போர்ட் கிள்ளான் சுயேட்சை  மண்டலத்தில் புதிய திட்டங்கள்: அமைச்சர் அந்தோணி லோக் தொடங்கி வைத்தார்
தற்போதைய செய்திகள்

போர்ட் கிள்ளான் சுயேட்சை மண்டலத்தில் புதிய திட்டங்கள்: அமைச்சர் அந்தோணி லோக் தொடங்கி வைத்தார்

Share:

உலகளாவிய புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியிலும், போர்ட் கிள்ளான் துறைமுகம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4 விழுக்காடு வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இன்று போர்ட் கிள்ளான் சுயேட்சை மண்டலமான பிகேஎஃப்சிக்கு அதிகாரப்பூர்வ வருகை புரிந்த அமைச்சர் அந்தோணி லோக், அங்கு பல மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான புதிய மேம்பாட்டுத் திட்டங்களை முறைப்படி தொடக்கி வைத்தார்.

விஸ்மா கோல்டன் ஹார்ஸ் முன்கூட்டிய அறிமுக விழா, க்யூ சென்டர் தொழிலாளர் குடியிருப்புத் திட்டம், சண்டெக் மெட்டீரியல்ஸ் எஸ்டிஎன் பிஎச்டி தொழிற்சாலை திறப்பு விழா, கோல்டன் ஹார்ஸ் ரப்பர் 2 ஆம் கட்ட தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் ஸ்மார்ட் இன்டெலிஜென்ஸ் தொழிலியல் பூங்கா ஆகிய திட்டங்களை அந்தோணி லோக் தொடக்கி வைத்தார்.

"விஸ்மா கோல்டன் ஹார்ஸ் முன்கூட்டிய அறிமுக விழாவில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்கு பாரம்பரிய சிங்க நடனத்துடன் உற்சாகமான முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது."

மேலும், சிலாங்கூர் மாநில அரசுடன் நிலுவையில் உள்ள நிலப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன், போர்ட் கிள்ளானின் 3-வது துறைமுக முனைய மேம்பாட்டுப் பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்கும் என்றும் அமைச்சர் அந்தோணி லோக் செய்தியாளர்களிடம் உறுதியளித்தார்.

3ஆவது துறைமுகத் திட்டம் பொது-தனியார் கூட்டுமுறை மற்றும் தனியார்மயமாக்கல் மூலம் செயல்படுத்தப்படும் என்பதையும் அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

ஹாங்காங்கில் 3 கிலோ கஞ்சா கடத்தியதாக மலேசிய இளைஞர் கைது

ஹாங்காங்கில் 3 கிலோ கஞ்சா கடத்தியதாக மலேசிய இளைஞர் கைது