Jul 18, 2026
Thisaigal NewsYouTube
வரி வருவாயில் 25% கிடைத்தால் ஏஆர்டி திட்டத்தை ஜொகூர் அரசே செயல்படுத்தும்: ஆன் ஹபிஸ்!
தற்போதைய செய்திகள்

வரி வருவாயில் 25% கிடைத்தால் ஏஆர்டி திட்டத்தை ஜொகூர் அரசே செயல்படுத்தும்: ஆன் ஹபிஸ்!

Share:

ஜொகூர் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட தன்னாட்சி விரைவு போக்குவரத்து ஏஆர்டி திட்டத்தை மத்திய அரசு ஜொகூரின் வரி வருவாயிலிருந்து 25 சதவீதத்தை மீண்டும் வழங்கினால், மாநில அரசே முன்னின்று செயல்படுத்த முடியும் என்று இடைக்கால மந்திரி பெசார் டத்தோ ஆன் ஹஃபிஸ் காசி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் வருமான வரி, முத்திரை வரிகள் மற்றும் சுங்க வரி ஆகியவற்றின் மூலம் சுமார் 20 முதல் 30 பில்லியன் ரிங்கிட் வரை மத்திய அரசுக்கு ஜொகூர் பங்களிக்கிறது, ஆனால் மாநிலத்திற்கு சுமார் 2.6 பில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஜொகூர் ரீஜெண்ட் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் முன்மொழிந்த அந்த 25 சதவீத நிதியை வழங்கினால், இத்திட்டத்தை மாநில அரசே ஏற்று நடத்த பரிசீலிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜொகூர்-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பான ஆர்டிஎஸ் செயல்பாட்டுக்கு வந்ததும் ஏற்படவுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த ஏஆர்டி திட்டம் மிக அவசரத் தேவையாகும் என்பதால், மத்திய அமைச்சரவை இதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் டத்தோ ஆன் ஹஃபிஸ் வலியுறுத்தினார்.

Related News