Jul 15, 2026
Thisaigal NewsYouTube
"தயா கெர் ஜெயா 2.0' திட்டத்தில் பெரும் ஊழல்: 97 பேர் கைது; 1.26 மில்லியன் ரிங்கிட் மீட்பு!
தற்போதைய செய்திகள்

"தயா கெர் ஜெயா 2.0' திட்டத்தில் பெரும் ஊழல்: 97 பேர் கைது; 1.26 மில்லியன் ரிங்கிட் மீட்பு!

Share:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் 'தயா கெர் ஜெயா 2.0' ஊக்கத்தொகை திட்டத்தில் நடந்த பெரும் நிதி மோசடியைப் பெர்கேசோ அமைப்பு கண்டறிந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான அரசாங்க நிதியுதவியைப் பெற்றுக்கொண்டு, 6 மாதங்களுக்குப் பிறகு தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்து நிறுவனங்கள் திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளன.

பெர்கேசோ அளித்த தகவலின் பேரில் ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடத்திய 'ஒப் டாயா' அதிரடி சோதனையில் 11 பிரதிநிதிகள், 86 நிறுவன உரிமையாளர்கள் உட்பட 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சோதனையில் 36 நிறுவனக் கணக்குகள் முடக்கப்பட்டு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், முதலாளிமார்களிடமிருந்து இதுவரை 1.26 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News