Sep 29, 2026
Thisaigal NewsYouTube
கோலா பிலா, தம்பினில் வீடு, கடை முன்பு பன்றியின் தலையை வீசிய சந்தேக நபர் கைது
தற்போதைய செய்திகள்

கோலா பிலா, தம்பினில் வீடு, கடை முன்பு பன்றியின் தலையை வீசிய சந்தேக நபர் கைது

Share:

சிரம்பான், மார்ச்.06-

தம்பினில் உள்ள கடை மற்றும் கோலா பிலாவிலுள்ள வீடு ஒன்றின் முன்பு, பன்றியின் தலை வீசப்பட்டதாக போலீசாரிடம் இரு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த இரு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இச்செயலைப் புரிந்ததாக நம்பப்படும் சந்தேக நபருக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக இச்சம்பவம் நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதே வேளையில், இது சமய சார்ந்த பிரச்சினை அல்ல என்று குறிப்பிட்டுள்ள அல்ஸாஃப்னி, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வைக்கும் பொருட்டு, கடன் வாங்கியவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவமானது, குற்றவியல் சட்டம் பிரிவு 504-இன் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related News