May 24, 2026
Thisaigal NewsYouTube
பாதாள சாக்கடைகளில் விஷவாயு கடுமையாக உள்ளது
தற்போதைய செய்திகள்

பாதாள சாக்கடைகளில் விஷவாயு கடுமையாக உள்ளது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-

கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் மண் புதையுண்ட சம்பவத்தில் காணாமல் போன விஜயலெட்சுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு, மீட்புப்படையினர் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விஜயலெட்சுமியை தேடும் பணியில் Pantai Dalam-மில் உள்ள Indah Water Konsortium கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் இருக்கும் 15 மீட்டர் உயரமுள்ள கழிவுநீர்த் தொட்டியில் அபாயகரமான வாயு குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்புப்படையைச் சேர்ந்த தலா இரண்டு உறுப்பினர்களும், கடந்த திங்கட்கிழமை நான்கு உறுப்பினர்களும் கோலாலம்பூர் மாநகரின் கழிவுநீரைச் சேமித்து வைக்கும் பெரிய தொட்டியில் இறங்கிய போதுதான் அதில் அபாயகரமான விஷ வாயு குவிந்து இருப்பது தெரியவந்துள்ளது.

நச்சுவாயு உள்ளிட்டு பல்வேறு வகையான ஆபத்தான வாயுக்கள் அந்த ராட்சஷ தொட்டியில் உள்ளன. மீட்புப்பணியில் வீரர்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால் இந்த நச்சு வாயுதான் என்று கண்டறிப்பட்டுள்ளது.

Related News