Feb 12, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் அமைச்சர் மீதான 1.11 பில்லியன் ரிங்கிட் முதலீடு முறைகேடு புகார்: எஸ்பிஆர்எம் தீவிர ஆய்வு
தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் மீதான 1.11 பில்லியன் ரிங்கிட் முதலீடு முறைகேடு புகார்: எஸ்பிஆர்எம் தீவிர ஆய்வு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.12-

முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவரின் அமைச்சில் சுமார் 1.11 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் புகாரைப் பெற்றுள்ளதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து எஸ்பிஆர்எம்மின் செயல்பாட்டுப் பிரிவு துணை தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி யஹாயா இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் பெறப்பட்ட முழுமையான புகாரையும் எஸ்பிஆர்எம் ஆய்வு செய்யும் என்றார்.

குறிப்பாக, 2009-ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் ஊழல், முறைகேடு அல்லது அதிகார துஷ்பிரயோகம் ஆகிய கூறுகள் இதில் உள்ளனவா என்பது கண்டறியப்படும்.

முதற்கட்டமாக, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சான்றுகளைச் சரிபார்த்த பின்னரே அடுத்தக் கட்ட விசாரணை நடத்தப்படும். நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இந்தச் செயல்முறை அமையும் என அஹ்மாட் குசைரி உறுதியளித்தார்.

Related News

‘வழிபாட்டுத் தல விவகாரங்கள்: சட்ட ரீதியாகவும் பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காண வேண்டும் - ராயர், சானி ஹம்ஸான் வலியுறுத்தல்

‘வழிபாட்டுத் தல விவகாரங்கள்: சட்ட ரீதியாகவும் பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காண வேண்டும் - ராயர், சானி ஹம்ஸான் வலியுறுத்தல்

வழிபாட்டுத் தல விவகாரங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தல்

வழிபாட்டுத் தல விவகாரங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தல்

ஜோகூர் குடிநுழைவுத் துறை மற்றும் போலீஸ் துறை அதிரடிச் சோதனை: 26 வெளிநாட்டினர் கைது

ஜோகூர் குடிநுழைவுத் துறை மற்றும் போலீஸ் துறை அதிரடிச் சோதனை: 26 வெளிநாட்டினர் கைது

சாரா (SARA) நிதியுதவி: ஒரே நாளில் 20 லட்சம் மலேசியர்கள் பயன் பெற்றுள்ளனர்

சாரா (SARA) நிதியுதவி: ஒரே நாளில் 20 லட்சம் மலேசியர்கள் பயன் பெற்றுள்ளனர்

‘கோயில் இடிப்பு' விவகாரம்: தமீம் தஹ்ரி உள்ளிட்ட 4 பேரின் தடுப்புக் காவல் ரத்து - நீதிமன்றம் உத்தரவு

‘கோயில் இடிப்பு' விவகாரம்: தமீம் தஹ்ரி உள்ளிட்ட 4 பேரின் தடுப்புக் காவல் ரத்து - நீதிமன்றம் உத்தரவு

மலேசிய மக்கள் தொகை 34.3 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் விகிதம் 6.5 விழுக்காடாக நீடிப்பு

மலேசிய மக்கள் தொகை 34.3 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் விகிதம் 6.5 விழுக்காடாக நீடிப்பு