Nov 18, 2026
Thisaigal NewsYouTube

கடன் மோசடி மிரட்டல் – நிர்வாணக் காணொளி பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடன் மோசடி மிரட்டல் – நிர்வாணக் காணொளி பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்

கோலாலம்பூரில், கடன் பெற்றதாகப் பொய்யாகக் குற்றஞ்சாட்டி, வெளிநாட்டுப் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி, காணொளி பதிவு செய்யக் கட்டாயப்படுத்தியதாக மிரட்டல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

32 வயதுடைய அந்தப் பெண், கடன் பரிந்துரைக்கான தரகு ஏற்பாடு தொடர்பாகச் சந்தித்த ஆடவரால் மிரட்டப்பட்டதாக மசீச. பொது சேவைகள் மற்றும் புகார் பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ மைக்கல் சோங் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 3ஆம் தேதி, அந்தப் பெண்ணின் பணியிட வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, தாம் கடன் வாங்கியதாகக் கூறி 10 ஆயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என அந்த ஆடவர் வலியுறுத்தியுள்ளார்.

பின்னர், பாலியல் உறவுக்கு இணங்க வேண்டும் அல்லது நிர்வாணக் காணொளியைப் பதிவு செய்து மூவாயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த பெண், காணொளியைப் பதிவு செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதுடன், பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தற்போது அந்தக் காணொளி இணையத்தில் கசியவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சட்ட உதவி வழங்கப்படுவதாகவும் மைக்கல் சோங் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நேபாளப் பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம் –பாதிக்கப்பட்ட  குடும்பங்கள் அரசாங்கத்திடம் அவசரக் கோரிக்கை

நேபாளப் பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம் –பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசாங்கத்திடம் அவசரக் கோரிக்கை

வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் – கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் – கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

தீவிரவாதச் சிந்தனைகள் அதிகரிக்கும் சூழலில், நாடாளுமன்றத்தில் சபா, சரவாக் மாநிலங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் அவசியம் – முஸ்தாபா

தீவிரவாதச் சிந்தனைகள் அதிகரிக்கும் சூழலில், நாடாளுமன்றத்தில் சபா, சரவாக் மாநிலங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் அவசியம் – முஸ்தாபா

தரவு மையங்களின் அதிவேக வளர்ச்சி – நாட்டின் மின்சார விநியோகம் பாதிக்கப்படலாம் -இயோ பீ யின் கவலை

தரவு மையங்களின் அதிவேக வளர்ச்சி – நாட்டின் மின்சார விநியோகம் பாதிக்கப்படலாம் -இயோ பீ யின் கவலை

12 வயது மகனை டோல் சாவடி அருகே கைவிட்ட தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

12 வயது மகனை டோல் சாவடி அருகே கைவிட்ட தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

நஜிப் ரசாக்கின் மன்னிப்பு உத்தரவில் கையெழுத்திடத் தயங்கிய ஹன்னா இயோ

நஜிப் ரசாக்கின் மன்னிப்பு உத்தரவில் கையெழுத்திடத் தயங்கிய ஹன்னா இயோ