Nov 18, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் – கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் – கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளப் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் செயல்திறன் குறித்த விரிவான அறிக்கைகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் வலியுறுத்தியுள்ளார்.

இன்று மக்களவையில் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பேசிய அவர், கிள்ளானில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் 2029ஆம் ஆண்டில் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், அவற்றின் பணிகள் வெறும் 1.21 விழுக்காடு முதல் 12.09 விழுக்காடு வரையிலேயே முன்னேறியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும், திட்டங்களின் வெற்றியை ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு மதிப்பிடாமல், வெள்ளப் பாதிப்புகள் உண்மையில் எந்த அளவுக்குக் குறைந்துள்ளன என்பதைக் கொண்டே மதிப்பிட வேண்டும் என்றார்.

இதற்கிடையில், நேற்று பெய்த கனமழையால் சிலாங்கூரின் நான்கு மாவட்டங்களில் 23 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. கிள்ளான், கோம்பாக், கோலா சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன என்பதையும் கணபதிராவ் சுட்டிக் காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நேபாளப் பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம் –பாதிக்கப்பட்ட  குடும்பங்கள் அரசாங்கத்திடம் அவசரக் கோரிக்கை

நேபாளப் பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம் –பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசாங்கத்திடம் அவசரக் கோரிக்கை

கடன் மோசடி மிரட்டல் – நிர்வாணக் காணொளி பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்

கடன் மோசடி மிரட்டல் – நிர்வாணக் காணொளி பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்

தீவிரவாதச் சிந்தனைகள் அதிகரிக்கும் சூழலில், நாடாளுமன்றத்தில் சபா, சரவாக் மாநிலங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் அவசியம் – முஸ்தாபா

தீவிரவாதச் சிந்தனைகள் அதிகரிக்கும் சூழலில், நாடாளுமன்றத்தில் சபா, சரவாக் மாநிலங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் அவசியம் – முஸ்தாபா

தரவு மையங்களின் அதிவேக வளர்ச்சி – நாட்டின் மின்சார விநியோகம் பாதிக்கப்படலாம் -இயோ பீ யின் கவலை

தரவு மையங்களின் அதிவேக வளர்ச்சி – நாட்டின் மின்சார விநியோகம் பாதிக்கப்படலாம் -இயோ பீ யின் கவலை

12 வயது மகனை டோல் சாவடி அருகே கைவிட்ட தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

12 வயது மகனை டோல் சாவடி அருகே கைவிட்ட தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

நஜிப் ரசாக்கின் மன்னிப்பு உத்தரவில் கையெழுத்திடத் தயங்கிய ஹன்னா இயோ

நஜிப் ரசாக்கின் மன்னிப்பு உத்தரவில் கையெழுத்திடத் தயங்கிய ஹன்னா இயோ