கோலாலம்பூர், செப்டம்பர்.21-
கோலாலம்பூரில் போக்குவரத்து விதிகளை மீறிய 42 ஆயிரத்து 288 வாகனமோட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் கடந்த ஐந்து நாட்களில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், லோரி ஓட்டுநர்கள் எனப் பல தரப்பினரும் அடங்குவர் எனக் கூறினார் கோலாலம்பூர் காவற்படையின் துணைத் தலைவர் டத்தோ முகமட் உசோஃப் ஜான் முகமட்.
எதிர்வரும் அக்டோபர் 1 ஆம் திகதி முதல் இந்த எச்சரிக்கை நோட்டீஸ்களுக்குப் பதிலாக, நேரடியாகத் தண்டம் விதிக்கப்படும் என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். இனி, போக்குவரத்து விதிகளை மீறினால் தப்பிக்க முடியாது என்றார் அவர்.








