சாலையில் அராஜகம் புரியும் வாகனமோட்டிகளுக்கு எதிராக போலீசார் நடத்திய ஓப்ஸ் சம்செங் சோதனை நடவடிக்கையில் 339 மோட்டார் சைக்கிள்களும், 21 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று சனிக்கிழமை இரவு ஜோகூர், இஸ்கன்டார் புத்தேரி, லெபோ சுல்தான் இஸ்மாடில் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையல் அபாயரகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலிஸ் தலைவர் சுபெரிதென்டன் இப்ராஹிம் மாட் சோம் தெரிவித்தார்.
பிடிபட்ட 18,20 வயதுடைய இரு இளைஞர்களும் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று இப்ராஹிம் குறிப்பிட்டார்.








