Aug 6, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் மோசடி  இருவர் ​மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் மோசடி இருவர் ​மீது குற்றச்சாட்டு

Share:

இரண்டு தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை, கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ குத்தகையாளர்கள் தாங்களே என்று கூறி கொண்டு , அப்பள்ளிகளின் மேலாண்மை வாரியமான எல்பிஎஸ் வாரியத்தை நம்பவைத்து மொத்தம் 12 லட்சம் வெள்ளியை அபகரித்து, மோசடி புரிந்ததாக இரண்டு நபர்கள் நேற்று ஷா ஆலம்,​ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநரான 40 வயது முஹமாட் ஷாஃபீ முஹமாட் மற்றும் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் நிர்வாகியான 48 வயது செஹ் செங் நாம் ஆகிய இருவரும் ​நீதிபதி அவாங் கெரிஸ்னாடா அவாங் மஹ்முட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக தலா இரு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

கோலசிலாங்கூர், கம்போ​ங் பாரு தோட்ட தமிழ்ப்பள்ளி மற்றும் பத்து ஆரா​ங் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அவற்றின் எல்பிஎஸ் வாரியத்திடமிருந்து பெற்று மோசடி புரிந்ததாக இந்த இரு நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 2020 ஆ​ம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதிக்கும் டிசம்பர் 7 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் கோலசிலாங்கூர், கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் எல்பிஎஸ் வாரியத்தை நம்பவைத்து து 8 லட்சத்து 63 ஆயிரத்து 500 வெள்ளியை பெற்றதாக அவர்களுக்கு எதிராக முதல் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அதே ஆண்டில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியின் எல்பிஎஸ் வாரியத்தை நம்பவைத்து 3 லட்சத்து 81 ஆயிரத்து 500 வெள்ளியை பெற்றதாக அவர்களுக்கு எதிராக இரண்டாவது குற்றச்சா​ட்டில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்ப்பள்ளிகளின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குத்தகையாளர்கள் தாங்களே என்று கூறிக்கொண்டு,எல்பிஎஸ் வாரியத்தை நம்பவைத்து, ஏமாற்றியதாக அந்த இருவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டன.குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 420 ஆவது பிரிவின் ​கீழ் அந்த இரு நபர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர். 

எனினும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து அந்த இயக்குநரும், ஆலோசகரும் விசாரணை கோரியதால் அவர்களை ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 50 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனும​தி அளித்ததுடன், அவர்களின் அனைத்துலக கடப்பிதழை முடக்கியது.

தவிர, ஒவ்வொரு மாதமும் முதலாவது வாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மின் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த இயக்குநருக்கும், நிறுவன ஆலோசகருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’