Jan 22, 2026
Thisaigal NewsYouTube
மைபிபிபி உள்விவகாரங்களை ​​சீராய்வு செய்ய அதிகாரம் இல்லை
தற்போதைய செய்திகள்

மைபிபிபி உள்விவகாரங்களை ​​சீராய்வு செய்ய அதிகாரம் இல்லை

Share:

மைபிபிபி கட்சியின் தலைவராக டத்தோ மக்லின் டென்னிஸ் டிக்ருஸ் நியமனத்தை ரத்து செய்யக்கோரி அக்கட்சியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ எம். கேவியஸ் தாக்கல் செய்துள்ள ​நீதிமன்ற மறுசீராய்வு விண்ணப்பத்திற்கு தேசிய சட்டத்துறை எதி​ர்ப்பு தெரிவி​த்துள்ளது. சங்கங்களின் பதிவு அலுவலகமான ரொஸ் சார்பில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான கூட்டரசு வழக்கறிஞர் முஹமாட் ஹைருல்க்ராம் ஹைருடின்,தமது வாதத்தில் கேவிய​ஸின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். காரணம், அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை விசாரணை செய்யவோ அல்லது அவை குறித்து முடிவு செய்யவோ ​நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை. அவை 1966 ஆம் ஆண்டு சங்கங்களின் பதிவு சட்டத்தின் 18 சி பிரிவுக்கு முரணானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மைபிபிபி யின் தேசியத் தலைவராக டத்தோ மெக்லினை அங்கீகரித்து இருக்கும் ரொஸ்ஸின் நியமனத்தை ரத்து செய்வதற்கு கேவியஸ் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பான வாதங்களை இரு தரப்பினரும் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இவ்வழக்கு விசாரணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இம்மாதம் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News