Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் அம்பாங் கோர விபத்து: 24 வயது ஓட்டுநர் மீது நாளை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஜாலான் அம்பாங் கோர விபத்து: 24 வயது ஓட்டுநர் மீது நாளை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

Share:

ஜாலான் அம்பாங் பகுதியில் இம்மாத தொடக்கத்தில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் மீது, நாளை இரு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

24 வயதுடைய அந்த நபர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ், வழக்கு தொடரப்படவுள்ளதாக, கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க மற்றும் விசாரணைத் துறை தலைவர்முகமது ஜம்ஜூரி முகமது ஈசா தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக, அவர் நாளை காலை 9 மணியளவில், கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 2-ஆம் தேதி, அதிகாலை 5.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், உயிரிழந்த துரைசிங்கம் ஆறுமுகம் மற்றும் மேனகா அர்ஜுனன் ஆகியோரின் மரணம் தொடர்பாக இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு