ஜோகூர் பாரு, செப்டம்பர்.11-
ஜோகூர் மசீச பொருளாளர் டத்தோ ங் கெங் ஹெங், ஜோகூர் சட்டமன்றத்தில் இன்று வியாழக்கிழமை செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் செனட்டராகப் பதவி வகிப்பதற்கான தீர்மானத்தை ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி இன்று தாக்கல் செய்தார். இதனை பூலோ காசாப் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸாஹாரி சாரிப் ஆதரித்தார்.
அதனைத் தொடர்ந்து, டத்தோ ங் கெங் ஹெங் அம்மாநில சட்டமன்றத்தால் செனட்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
57 வயதான ங் கெங் ஹெங் கடந்த 1996 முதல் மசீச கட்சியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








