கோலாலம்பூர், செப்டம்பர்.07-
'அதிகாரம் என்பது ஒரு பெரிய பொறுப்பு; அது மக்களுக்கு முழுமையாகப் பயன்பட வேண்டும்' என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடியாகக் கூறியுள்ளார். ஒரு தலைவனின் உண்மையான சோதனை, பதவி விலகிய பிறகு அல்ல, பதவியில் இருக்கும் போதுதான் என்று அவர் அழுத்தம் திருத்தமாகப் பேசியுள்ளார்.
எதிர்காலத்தில் மக்கள் தன்னை 'பேசியது போதும், என்ன செய்தீர்கள்?' என்று கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே, தான் ஒவ்வொரு முடிவையும் மக்களின் நலனுக்காகவே எடுப்பதாக அவர் தெரிவித்தார். தனது நிர்வாகத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை என்று சிலர் கூறுவதை அவர் மறுத்து, ஒவ்வொரு முடிவும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டது என்று உறுதிபடத் தெரிவித்தார்.








