Oct 18, 2026
Thisaigal NewsYouTube

சீனாவில் உள்ள புலம் பெயர்ந்த மலேசியர்களுடன் பேரரசர் சந்திப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சீனாவில் உள்ள புலம் பெயர்ந்த மலேசியர்களுடன் பேரரசர் சந்திப்பு

பெய்ஜிங் , செப்டம்பர் 21-

சீனாவில் உள்ள புலம்பெயர்ந்த மலேசியர்களுடன் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இன்று சந்திப்பு நடத்தினார்.

சீன அதிபர் XI Jinping-கின் அழைப்பின் பேரில் இம்மாதம் 19 முதல் 22 ஆம் தேதி வரை சீனாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை சுல்தான் இப்ராஹிம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் பெய்ஜிங்கில் ஒரு ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மாமன்னர் கலந்து கொண்டார்.

ஜோகூர் துங்கு இட்ரிஸ் இஸ்கந்தர், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் , வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான் முகமது ஜைன் மற்றும் சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நார்மன் முகமட் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வணிகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சீனாவில் உள்ள மலேசிய தூதரக அதிகாரிகள் உட்பட சுமார் சுமார் 300 மலேசியர்கள் கலந்து கொண்ட இந்த ஒரு மணி நேர வரவேற்பு நிகழ்ச்சியில் சீன பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நாட்டின் உயரியத் தலைவரைச் சந்திப்பதில் உற்சாகமாக இருந்த மலேசியர்களுடன் மாமன்னர் அன்புடன் உரையாடி அளவளாவினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →