தம்முடைய அனைத்துலக கடப்பிதழை எவ்வித நிபந்தனையின்றி திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
20 கோடி வெள்ளி பெறுமானமுள்ள சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பான 3 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள முகைதீன், வழக்கு ஒரு புறம் நடைபெற்றாலும் தம்முடைய அனைத்துலக கடப்பிதழ் எந்தவொரு நிபந்தனையின்றி திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.








