குவாந்தான், மே.05-
மேன்மை தங்கிய பகாங் மாநில சுல்தான் Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah, சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியென் லூங் மற்றும் அவரது மனைவி ஹோ சிங் ஆகியோரை இன்று செவ்வாய்க்கிழமை Istana Abdulaziz அரண்மனையில் நேரில் சந்தித்தார்.
இச்சந்திப்பில் சுல்தானின் துணைவியார் Tunku Azizah Aminah Maimunah Iskandariah மற்றும் பகாங் மாநில பட்டத்து இளவரசர் Tengku Hassanal Ibrahim Alam Shah ஆகியோர் உடனிருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கலந்துரையாடலில், பகாங் மற்றும் சிங்கப்பூர் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால கூட்டாண்மை வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பகாங் மாநில அரண்மனை தெரிவித்துள்ளது.
மதிய விருந்திற்கு முன்பு, விருந்தினர்களுக்கு அரண்மனை வளாகத்தைச் சுற்றிக் காட்டும் விதமாக சுல்தான் அவர்களுடன் வலம் வந்தார்.
கடந்த மே 4-ஆம் தேதி மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை புரிந்துள்ள லீ, வரும் 8-ஆம் தேதி வரை பகாங் மற்றும் திரங்கானுவிற்கு ஐந்து நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








