Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பொதுமக்களின் வாட்சாப் கணக்குகள் முடக்கம் குறித்து எம்சிஎம்சி தீவிர விசாரணை
தற்போதைய செய்திகள்

பொதுமக்களின் வாட்சாப் கணக்குகள் முடக்கம் குறித்து எம்சிஎம்சி தீவிர விசாரணை

Share:

பொதுமக்களின் சாட்டப்பட்டது கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், ஹேக் செய்யப்பட்டதாகவும், அணுக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கிடைத்த புகார்கள் குறித்து மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த விவகாரம் தொடர்பாக எம்சிஎம்சி, மெத்தா நிறுவனத்திடம் விளக்கம் கோரி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

மேலும், பயனர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வாட்சாப் நிறுவனத்துடன் ஒத்துழைப்பை நாடி வருவதாகவும் எம்சிஎம்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயனர்கள், தங்களது வாட்சாப் கணக்கை மீட்டெடுக்க அல்லது சரிபார்க்க அதிகாரப்பூர்வ வாட்சாப் வழிகளை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பணமோ, தனிப்பட்ட தகவல்களோ அல்லது verification code-களையோ கேட்டு, வாட்சாப் கணக்கை மீட்டுத் தருவதாகக் கூறும் நபர்களிடம் கொடுக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எம்சிஎம்சி எச்சரிக்க விடுத்துள்ளது.

அதேவேளையில், அதிகாரப்பூர்வ வாட்சாப் வழிகள் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டால், பயனர்கள் எம்சிஎம்சியிடம் புகார் அளிக்கலாம். அதன் பின்னர், உரிய நடவடிக்கைக்காக அந்தப் புகார் மெத்தா நிறுவனத்திடம் அனுப்பப்படும் என்றும் எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.

Related News