Feb 18, 2026
Thisaigal NewsYouTube
சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடித்ததில் இளைஞரின் கால் துண்டானது
தற்போதைய செய்திகள்

சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடித்ததில் இளைஞரின் கால் துண்டானது

Share:

சிகாமாட், பிப்ரவரி.18-

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சிகாமாட், புக்கிட் சிப்புட், தாமான் டாமாய் ஜெயா பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்னால் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தனது இடது காலை இழந்தார்.

இச்சம்பவம் குறித்து சிகாமாட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரிடெண்டென் Mohd Jumazanzahir Chek Ismail கூறுகையில், நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் சீனப் புத்தாண்டை முன்னிட்டு shoot cake 4 D 16 shot premium ரக பட்டாசுகளை வெடிக்கச் செய்த போது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு எதிர்பாராத விதமாக வெடித்ததில் அவரது இடது கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு துண்டானது.

பாதிக்கப்பட்ட இளைஞர் உடனடியாக சிகாமாட் மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முழங்காலுக்குக் கீழ் அவரது இடது கால் துண்டிக்கப்பட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது அவர் சீரான நிலையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சமரசம் கிடையாது: ஜோகூர் அரசு நிறுவனங்களில் ஊழலுக்கு இடமில்லை - மலேசிய மாமன்னர் எச்சரிக்கை

சமரசம் கிடையாது: ஜோகூர் அரசு நிறுவனங்களில் ஊழலுக்கு இடமில்லை - மலேசிய மாமன்னர் எச்சரிக்கை

JustGO செயலி: 2 லட்சம் பேர் பதிவிறக்கம் - புதிய தானியங்கி டோல் கட்டண முறை அறிமுகம்

JustGO செயலி: 2 லட்சம் பேர் பதிவிறக்கம் - புதிய தானியங்கி டோல் கட்டண முறை அறிமுகம்

தன்னார்வ அமைப்பின் கூடாரம் பறிமுதல்: டிபிகேஎல்லின் நேர்மையைக் கேள்வி கேட்கும் ஃபிர்டாவுஸ் வோங்

தன்னார்வ அமைப்பின் கூடாரம் பறிமுதல்: டிபிகேஎல்லின் நேர்மையைக் கேள்வி கேட்கும் ஃபிர்டாவுஸ் வோங்

ஜப்பானில் கைது செய்யப்பட்ட மலேசிய இளைஞர்: வழக்கறிஞரை நியமித்தது குடும்பம்

ஜப்பானில் கைது செய்யப்பட்ட மலேசிய இளைஞர்: வழக்கறிஞரை நியமித்தது குடும்பம்

கட்டாய மரண தண்டனை ரத்து: சமூகத்தில் பெருகும் குற்றங்களும் நீதிக்கான கேள்விகளும்

கட்டாய மரண தண்டனை ரத்து: சமூகத்தில் பெருகும் குற்றங்களும் நீதிக்கான கேள்விகளும்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு