பள்ளி மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வெளியில் இருந்து அழைக்கப்பட்ட பேச்சாளரைச் சம்பந்தப்படுத்திய நிகழ்ச்சிகளை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் மாணவர்களின் பாதுகாப்புடன் தொடர்புடையதால் மிகவும் தீவிரமாகக் கருதப்பட வேண்டும் என்றும், முழுமையான விசாரணைக்கு வழிவிடும் வகையில் நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் போலீசில் புகார் செய்யுமாறும் ஃபட்லீனா கேட்டுக் கொண்டார்.








