Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தாக்குதல், இருவருக்கு பாராங் வெட்டு: பிரிக்பீல்ட்ஸில் சம்பவம்
தற்போதைய செய்திகள்

தாக்குதல், இருவருக்கு பாராங் வெட்டு: பிரிக்பீல்ட்ஸில் சம்பவம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.09-

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஓர் இன்னிசை கேளிக்கை மையத்தின் முன்புறம் நிகழ்ந்த தகராற்றில் பாராங், இரும்புத் தடியை ஏந்திய இரண்டு சந்தேகப் பேர்வழிகள், இரு நபர்களைத் தாக்கி, கடும் காயங்களை விளைவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்தது என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.

அந்த கேளிக்கை மையத்தின் முன்புறச் சாலையோரத்தில் ஆடவர் ஒருவர், சந்தேகப் பேர்வழி ஒருவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அந்த சந்தேகப் பேர்வழியின் மற்றொரு சகா அவ்விடத்திற்கு ஓடி வந்து பாராங்கினால் தாக்கியுள்ளார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார் என்று ஏசிபி கூ மஷாரிமான் கூறினார்.

இந்தத் தாக்குதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கும், அங்கு எதிர்பாராத விதமாக வந்த அவரின் நண்பருக்கும் கடும் பாராங் வெட்டுகள் ஏற்பட்டுள்ளன.

கடுமையான காயங்களுக்கு ஆளான 33 மற்றும் 47 வயதுடைய அந்த இரு நபர்களும் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் 30 வயது மதிக்கத்தக்க நபர்கள், அங்கிருந்து தப்பிவிட்டதாக ஏசிபி கூ மஷாரிமான் தெரிவித்தார்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களைப் போலீசார் சம்பவ இடத்தில் மீட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News