ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று அதிகாலை நடந்த தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்டவர்கள் மாண்டனர். 150 க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா (Nineveh) மாநிலத்தின் அல்-ஹம்டனியா (Al-Hamdaniya) வட்டாரத்தில் இத்தீ விபத்து ஏற்பட்டது.
திருமண மண்டபத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைக்க முயலும் படங்களை ஈராக்கின் தேசிய செய்தி நிறுவனமான ஐஎன்ஏ வெளியிட்டுள்ளது.
அதேவேளையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஈராக்கியப் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீ மூண்டதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் சம்பவ இடத்தில் வாணவேடிக்கையால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் ஊடகமான ரூடாவ் கூறியது.








