பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடர்பில் ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் ரெடொஜென்னும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தங்களுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தை தொலைபேசி வாயிலாக நடைபெற்றதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் உள்ளிட்ட பல பயங்கராத குழுக்கள், இஸ்ரேலின் பல பகுதிகளில் வான், தரை, மற்றும் கடல் வழியாக ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியதில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு உடனடி நிவாரண நிதியாக மலேசியா 10 லட்சம் வெள்ளியை வழங்குவதாக அறிவித்துள்ள வேளையில் ஆகக்கடைசியான நிலவரத்தை அறிய துருக்கி அதிபருடன் பிரதமர் அன்வார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.








