Sep 27, 2026
Thisaigal NewsYouTube
2030-ஆம் ஆண்டிற்குள் முதியவர்கள் 20 இயற்கையான பற்களைக் கொண்டிருப்பதை இலக்காகக் கொண்டுள்ளது சுகாதார அமைச்சு
தற்போதைய செய்திகள்

2030-ஆம் ஆண்டிற்குள் முதியவர்கள் 20 இயற்கையான பற்களைக் கொண்டிருப்பதை இலக்காகக் கொண்டுள்ளது சுகாதார அமைச்சு

Share:

கோலா சிலாங்கூர், ஏப்ரல்.26-

தேசிய பல் சுகாதார வியூகத் திட்டம் 2022-2030-இன் படி, 2030-ஆம் ஆண்டிற்குள் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான முதியவர்கள் குறைந்தது 20 இயற்கையான பற்களைத் தக்க வைத்துக் கொள்வதை உறுதிச் செய்ய சுகாதார அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதைய ஆய்வுகளின்படி 34.3 விழுக்காடு முதியவர்கள் மட்டுமே இந்த அளவிலான பற்களைக் கொண்டுள்ளனர்; 13.9 விழுக்காட்டினர் வாய்வழிச் செயல்பாட்டுக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இந்த இலக்கை அடைய Kembara Senyuman என்ற நடவடிக்கை மூலம் நாடு முழுவதும், குறிப்பாகக் கிராமப்புறங்களில் வசிக்கும் முதியவர்களுக்கு அதிநவீன 3DDT தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவாகவும் தரமாகவும் செயற்கைப் பற்களை வழங்கும் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் முதியவர்கள் 20 இயற்கையான பற்களைக் கொ... | Thisaigal News