Oct 14, 2026
Thisaigal NewsYouTube

விபத்துக்குள்ளான சிறார்களை டாக்டர் லிங்கேஸ்வரன் நேரில் சென்று சந்தித்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

நிபோங் தெபால், பிப்.19-

பினாங்கு, நிபோங் தெபால், சுங்கை பாக்காப்- பட்டர்வொர்த் கூட்டரசு நெடுஞ்சாலையில் நேற்று காலையில் நிகழ்ந்த லோரி – மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் கடுங்காயங்களுக்கு ஆளான சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் டர்ஷன் மற்றும் அச்சிறுவனின் தங்கை கவர்ஜித்தா ஆகியோரை மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

செபராங் பிறை வட்டாரத்தில் 20 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 800 மாணவர்களுக்கு தமது 6 மாத கால சம்பளத்தில் பள்ளி உபரணங்களை வழங்குவதற்கான வவுச்சர்களை நேற்று காலையில் வழங்கிக்கொண்டு இருந்த டாக்டர் லிங்கேஸ்வரன், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அவ்விரு சிறார்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சுங்கைப் பாக்காப் மருத்துவமனைக்கு விரைந்தார்.

சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநரான டாக்டர் லிங்கேஸ்வரன், அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டர்ஷனையும், அவரின் 5 வயது சகோதரி கவர்ஜித்தாவை நேரில் சென்று சந்தித்ததுடன், அவர்களின் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தனது பாட்டியின் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த இந்த விபத்தில் சிறுவன் டர்ஷனுக்கு கடுங்காயம் ஏற்பட்டுள்ளது. கவர்ஜித்தா காலை இழக்கும் அபாயத்திற்கு ஆளாகியிருப்பதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் துயரத்தில் மூழ்கியிருக்கும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு டாக்டர் லிங்கேஸ்வரன் ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு துணை நிற்கும் வகையில் சிறார்களைக் கவனித்துக் கொள்வதற்கு கைச்செலவிற்கு கணிசமான நிதி உதவியையும் வழங்கினார்.

இரு உடன் பிறப்புகளும் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திப்பதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்