Oct 8, 2026
Thisaigal NewsYouTube

சுங்கை சிப்புட்டில் சாலையோரம் சடலம்: வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுங்கை சிப்புட்டில் சாலையோரம் சடலம்: வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தகவல்

சுங்கை சிப்புட், சுங்கை செஜுக், ஜாலான் கம்போங் ஆயர் ஹித்தாம் பகுதியில் சாலையோரத்தில் நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 53 வயது ஆடவர், வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு பின்னர் அங்கு சடலம் வீசப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

பிரேதப் பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட நெரிப்பு காயமே மரணத்திற்கான முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும் முகம், கழுத்து மற்றும் மார்புப் பகுதிகளில் கூர்மையான பொருளால் வெட்டப்பட்ட காயங்களும், இரு கைகளிலும் காயங்களும் இருந்ததாக சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் சாரான் ஐ வான் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர் அதிகாலை 4.45 மணியளவில் சாலையோரத்தில் அசைவற்ற நிலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதுடன், சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →