ஜார்ஜ்டவுன், அக்டோபர்,06-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாணவன் ஒருவனைப் பிரம்பால் அடித்து காயப்படுத்தியதாக ஓர் ஆசிரியரும், பணி ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியரும் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இருவரும் வெவ்வேறு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
பணி ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியரான 59 வயது சூங் கியான் பெங் மற்றும் ஓர் ஆசிரியரான 47 வயது லாவ் தெயிக் ஹுவா ஆகியோர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் ஓர் இடைநிலைப்பள்ளியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யம் குற்றவியல் சட்டத்தின் கீழ் ஆசிரியர் சேவையைச் சேர்ந்த இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








