Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மாணவன் தாக்கப்பட்ட சம்பவம், மூவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவன் தாக்கப்பட்ட சம்பவம், மூவர் கைது

பாரிட், டிச.20-


கடந்த ஞாயிற்றுக்கிழமை உயர்கல்விக்கூட மாணவன் ஒருவனை மாணவர் கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரா, பாரிட், ஸ்ரீ இஸ்கண்டாரில் உள்ள பொது உயர்கல்விக்கூடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்தப் பல்கலைக்கழக மாணவன், மற்ற மாணவர்களால் ஒரு கும்பலாக பகடிவதை செய்யப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து 18 க்கும் 20 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பேரா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ஹசேஸுல் ஹெல்மி ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →