Sep 21, 2026
Thisaigal NewsYouTube
நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி
தற்போதைய செய்திகள்

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் தற்போதைய நிலைமை தொடர்பாக மலேசியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் பலர் உதவ முன்வருவதாக அவரது மனைவி டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் தெரிவித்துள்ளார்.

புருணை, இத்தாலி, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள நண்பர்களும், தொடர்பில் இருப்பவர்களும் தங்களை அணுகி, நஜிப்பின் வீட்டுக் காவல் அனுமதி குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தங்களால் முடிந்த உதவியை வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், நஜிப் மீண்டும் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், இந்த கடினமான காலங்களிலும் தங்களுடன் இருந்த உண்மையான நண்பர்கள் யார் என்பதை தற்போது உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து உதவி வழங்க முன்வந்தவர்கள் பற்றியோ, எவ்வளவு வழங்க முன்வந்தனர் என்பது குறித்தோ அவர் தெரிவிக்கவில்லை.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நஜிப்புக்கு, 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் மற்றும் பிற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, எஞ்சியுள்ள சிறைத் தண்டனையை வரும் 2028-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன் படி, 50 மில்லியன் ரிங்கிட்டை செலுத்த அம்னோ உள்ளிட்ட பாரிசானைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகள் நஜிப்புக்கு ஆதரவாக நிதி திரட்டிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி

6,000 இந்திய தொழில்முனைவோருக்கு 140 மில்லியன் ரிங்கிட் முத்ரா நிதி வழங்கல் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

6,000 இந்திய தொழில்முனைவோருக்கு 140 மில்லியன் ரிங்கிட் முத்ரா நிதி வழங்கல் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ ... | Thisaigal News