Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவில் XFG என்ற புதிய வகை கோவிட் தொற்றுக்கு ஒருவர் பலி - சுகாதார அமைச்சு தகவல்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் XFG என்ற புதிய வகை கோவிட் தொற்றுக்கு ஒருவர் பலி - சுகாதார அமைச்சு தகவல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.20-

மலேசியாவில் புதிய வகை கோவிட் 19 தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டிற்கான 35 தொற்றுநோயியல் கணக்கெடுப்பு வாரத்தில், XFG என்ற புதிய வகை கோவிட் தொற்றானது, 91 வயதான மூத்த குடிமகன் ஒருவரிடம் கணடறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், 35-வது தொற்று நோயியல் கணக்கெடுப்பு வாரத்தில், பதிவாகியுள்ள மொத்த நோயாளிகளில், 8.2 சதவிகிதம் பேருக்கு, இந்த புதிய கோவிட் வகை உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

என்றாலும், 34-வது வாரத்தை ஒப்பிடுகையில், 35-வது வாரத்தில் அது 12.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News