நெகிரி செம்பிலான் கம்போங்ஆயேர் கூனீங், ஜாலான் லிங்கி யில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தமது கால்நடை வளர்ப்புக் கொட்டகையில் சிக்கிக் கொண்ட பெண்ணை தீயணைப்பு - மீட்புப் படையினர் மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து 58 வயது ஜி. சாந்தி யை மீட்க அவரது மகன் ஆர் சேது ராஜ் தமது தரப்புக்குத் தகவல் தெரிவித்ததாக ரந்தாவ் தீயணைப்பு - மீட்புப் படை நிலையத்தின் தலைவர் முகமது சியாஸ்வான் சைடி தெரிவித்தார்.
பிறபகல் 1.30 மணிக்குத் தொடங்க்ய கன மழையால் 5 மீட்டர் வரை வெள்ளம் ஏற்பட்டது.
ஜி சாந்தியுடன் அந்தக் கொட்டகையில் இருந்த 8 மாடுகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.








