Oct 17, 2026
Thisaigal NewsYouTube

அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து ஆடவர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து ஆடவர் மரணம்

பெட்டாலிங் ஜெயா, நவ.14-


பெட்டாலிங் ஜெயா, பெலாங்கி உத்தாமாவில் உள்ள ஒரு கொண்டோமினியம் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியிலிருந்து கீழே விழுந்து ஆடவர் ஒருவர் மரணமுற்றார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.39 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

மரணமுற்ற நபரிடம் எந்தவொரு அடையாள ஆவணமும் காணப்படாததால் அவரை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பபட்டுள்ளது.

அந்த வீடமைப்புப்பகுதியைச் சேர்ந்தவராக இருக்கும் அந்த நபரைப்பற்றி யாரும் அறிந்து வைத்திருக்காததால் அவரைப்பற்றிய உடனடி தகவல் எதுவும் இல்லை. அதேவேளையில் இச்சம்பவம் குறித்து போலீசார் புலன் விசாரணை செய்து வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →