Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக கணவன், மனைவி மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக கணவன், மனைவி மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், நவ.11-


கடந்த ஆண்டு மே மாதம் ஏமன் நாட்டுக்கு உள்ளூரைச் சேர்ந்த மூன்று பெண்களை வர்த்தக நோக்கில் ஆள் கட்டதலில் ஈடுபட்டதாக கணவனும், மனைவியும் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

37 வயது முகமட அஸ்பர் கபார், அவரின் 31 வயது மனைவி கதிஜா யூசோப் ஆகியோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி ஏமன், தாரிம் என்ற ஊருக்கு 19 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று உள்ளூர் பெண்களை வர்த்தக நோக்கில் கடத்தியதாக அந்த தம்பதியர் மீது குற்றச்சாட்டுக் கொண்டு வரப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், கூடிய பட்சம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குடிநுழைவு ஆள்கடத்தல் சட்டத்தின் கீழ் அந்த தம்பதியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக கணவன், மனைவி மீது குற்றச்சாட்டு | Thisaigal News