Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஜூலை 1 முதல் தீபகற்ப மலேசியாவில் புதிய மின்சாரக் கட்டணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜூலை 1 முதல் தீபகற்ப மலேசியாவில் புதிய மின்சாரக் கட்டணம்

கோலாலம்பூர், ஜூன்.20-

தீபகற்ப மலேசியாவில் உள்ள 23.6 மில்லியனுக்கும் அதிகமான வீட்டுப் பயனர்கள், எதிர்வரும் ஜூலை 1 முதல், 2027 டிசம்பர் 31, வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய மின்சாரக் கட்டண முறை மூலம் மிகவும் நியாயமான கட்டணங்களைப் பெற உள்ளனர் என எரிசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளன: அவை அடிப்படைத் தள்ளுபடி விகிதங்களின் மறுசீரமைப்பு,
புதிய கட்டண அட்டவணை அறிமுகம், எரிபொருள் செலவு சரிசெய்தல் பொறிமுறை ஆகும்.

புதிய சராசரி அடிப்படைத் தள்ளுபடி விகிதம் கிலோவாட் ஒன்றுக்கு 45.40 சென் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதற்கு முன்னர் 45.62 சென்னாக இருந்தது. புதிய தானியங்கி எரிபொருள் சரிசெய்தல் பொறிமுறையானது, சந்தை எரிபொருள் விலைகள், அந்நியச் செலாவணி விகிதங்கள் ஆகியன அடிப்படையில் உற்பத்திச் செலவுகளைத் தானாகச் சரி செய்ய உதவும் என ஆணையம் குறிப்பிட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →