Nov 5, 2026
Thisaigal NewsYouTube

புன்சாக் ஆலாம் பகுதியில் திடீர் வெள்ளம்: பல இடங்கள் பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புன்சாக் ஆலாம் பகுதியில் திடீர் வெள்ளம்: பல இடங்கள் பாதிப்பு

புஞ்சாக் ஆலாமில் உள்ள யுனிவெர்சிட்டி தெக்னொலொஜி மாரா வளாகம் உட்பட பல பகுதிகளில் இன்று மாலை பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் வளாகத்தின் பேருந்து காத்திருப்புப் பகுதி மற்றும் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மேலும், சுங்கை பூலோ பகுதியில் உள்ள தாமான் ஶ்ரீ ஆலாம், சௌஜானா உத்தாமா மற்றும் கம்போங் ஜோஹான் செத்தியா ஆகிய இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது.

இச்சம்பவங்கள் தொடர்பாக மூன்று அவசர அழைப்புகள் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரிஸால் அஸ்பார் தெரிவித்தார்.

கம்போங் ஜோஹான் செத்தியாவில் சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததுடன், தாமான் ஶ்ரீ ஆலாம், சௌஜானா உத்தாமா பகுதிகளிலும் சுமார் 0.3 மீட்டர் உயரத்திற்கு நீர் தேங்கியது. எனினும், எவரையும் வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. யுஐடிஎம் புஞ்சாக் ஆலாம் வளாகத்தைத் தீயணைப்புப் படையினர் சென்றடைந்தபோது வெள்ளநீர் வடிந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →