Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கால்பந்து வீரர் காலிட் அலி காலமானார்
தற்போதைய செய்திகள்

கால்பந்து வீரர் காலிட் அலி காலமானார்

Share:

முன்னாள் தேசிய கால்பந்து வீரர் காலிட் அலி காலமானார். அவருக்கு வயது 66. பெட்டாலிங் ஜெயா, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலிட் அலி, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.05 மணியளவில் தனது குடும்பத்தினரின் முன்னிலையில் இறுதி மூச்சை விட்டதாக அவரின் வளர்ப்பு சகோதரர் சைனால் அபிடின் தெரிவித்தார்.

காலிட் அலி சிறிது காலமாக புற்று நோயினால் அவதியுற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை தேசிய கால்பந்து வீரராக நாட்டை பிரதிநிதித்து, கால்பந்து அரங்கத்தை அலங்கரித்தவர் காலிட் அலி என்று புகழாஞ்சலி சூட்டப்பட்டது.

கடந்த 1980 ஆம் ஆண்டு ரஷியா, மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஹரிமாவ் மலாயா தகுதி சுற்றில் இடம் பெறுவதற்கு காலிட் அலி உறுதுணையாக இருந்தார்.

மத்திய திடல், தற்காப்பு ஆட்டக்காரரான காலிட் அலி தேசிய குழுவில் பங்கேற்பதற்கு முன்னதாக நீண்ட காலமாக கோலாலம்பூர் குழுவிற்கு விளையாடி வந்தார்.

Related News